பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளின் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விதி எப்.எல். 2 பார் எனப்படும் மனமகிழ் மன்றங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவினர், 23 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து அறுவதாக மாற்றிட வேண்டும், காலி பாட்டில்களை திரும்பப் பெற ஒப்பந்ததாரரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும், டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் 100% மின் கட்டணத்தை வழங்கிட வேண்டும், கடைகளுக்கு சரக்கு இறக்கித் தர நிர்வாகமே இதற்கான கூலிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இக்கோரிகளை ஏற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

