தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேக்கரி பொருட்கள் (அடுமனைப் பொருட்கள்) தயாரிக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி வரும் 16, 17 தேதிகளில் நடைபெறுகிறது.

அடுமனை உணவுப் பொருட்களுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும்.

இந்தப்பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின்போது ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட் பப்ஸ் ஆகிய அடுமனைப் பொருட்கள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.