கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள திரிபுரா வாசினி, பேலஸ் கிரவுண்ட்ஸில் தி இன்க்ரெடிபிள் செஃப் சேலஞ்ச் 2026, ஜூன் 4 முதல் 6 வரை நடைபெற்றது.

வேர்ல்ட் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி எக்ஸ்போ மற்றும் சவுத் இந்தியா செஃப்ஸ் அசோசியேஷன் உடன் இணைந்து  இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து முன்னணி தொழில்முறை சமையல் கலைஞர்கள், சமையல் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியை புகழ்பெற்ற சமையல் கலைஞர்களான செஃப் மன்ஜித் சிங் கில் மற்றும் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில், நேரடி சமையல் சவால், பழம் மற்றும் காய்கறி செதுக்குதல், பெட்டிட் ஃபோர்ஸ் மற்றும் பிரலைன்கள், தட்டில் பரிமாறப்படும் சிற்றுண்டிகள், மூன்று அடுக்கு திருமண கேக்குகள், முட்டை தயாரிப்பு மற்றும் மாக்டெயில்கள் உள்ளிட்ட பல்வேறு சமையல் பிரிவுகள் இடம்பெற்றன.

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் அறிவியல் மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறை மாணவர் கீர்த்திவாசன் மற்றும் மாணவி சௌமியா ஆகியோர், நேரடி சமையல் சவாலில் பங்கேற்று இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளர் சிவகுமார், துறைத் தலைவர் ராஜன் ஆகியோர் மாணவர்களின் சாதனையைப் பாராட்டினர்.