வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டங்களில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மாநகராட்சி மேயரிடமும், ஆணையரிடமும் வழங்கலாம்.
மக்கள் கொடுக்கும் இந்த மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த நிலையில் இக்கூட்டம் நாளை (9.6.26) நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

