கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூன் 1 முதல் 5ம் தேதி வரை நடைபெற்றது.
நவீன கல்விசார் சூழலை வழிநடத்துதல், செயற்கை நுண்ணறிவு, உயர்தர ஆய்வு வெளியீடுகள் மற்றும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சியில் வணிகவியல், மேலாண்மை அறிவியல், பொருளாதாரம் மற்றும் நிறுவனச் செயலாளர் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியின் முக்கிய நோக்கங்களாக, ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் உயர்தர ஆய்வுகளை உருவாக்குதல், சர்வதேச தரமிக்க ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிடும் திறனை மேம்படுத்துதல், ஆராய்ச்சி நிதி பெறும் திறனை வளர்த்தல் மற்றும் சமூக தாக்கமிக்க ஆலோசனைப் பணிகளில் ஈடுபடுதல் ஆகியவை அமைந்தன.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. ஐஎம் கோவையைச் சேர்ந்த சோனி, கிரிஸ்து ஜெயந்தி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் பெல்லார்மின், துணை முதல்வர் செந்தில்குமார் ஆறுமுகம், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஹரீந்திரநாத் மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முருகன் பட்டுசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆராய்ச்சி நிதி, ஆலோசனைச் சேவைகள், உயர்தர ஆய்விதழ் வெளியீடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள், அளவியல் மற்றும் தரவியல் ஆய்வு முறைகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
