தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பு (2026-27) வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், வேளாண் தொழில்புரிவோர் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் திறந்த வெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்ககம் மூலம் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் பாடங்கள் மற்றும் இணையவழி சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன். இந்த கல்வி ஆண்டிற்கான (2026 – 2027) புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் உரம் மற்றும் பூச்சி மருந்துக்கடை துவங்குவதற்கு தேவையான உரிமம் பெறலாம். இதரப் பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் தோட்டக்கலை நாற்றங்கால், பண்ணை இயந்திரக் கருவிகள், காளான் வளர்ப்பு, உயிர் உரங்கள் உற்பத்தி, உயிரியல் முறை பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த பண்ணையம், வேளாண் பொருட்கள் மதிப்பூட்டல் மற்றும் தரமான விதை உற்பத்தி தொடர்பான சுய தொழில் தொடங்கி தங்கள் வாழ்க்கை தரம் உயர இந்த தொலைத்தூரக் கல்வி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வேளாண் இடுப்பொருள் பட்டயப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறந்த வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களால் நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:  9442111048/9489051046/0422-6611229, இணையதளம் www.tnau.ac.in