கோவை மாநகரில் இந்த வாரம் (1.6.26 முதல் 6.6.26 வரை) ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய் கூறியுள்ளார்.

கோவையின் வடக்கு பகுதிகளில் உள்ள இடங்களான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் வரும் நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார்.

மழையானது, மிதமானது முதல் பலத்த மழையாக இருக்கும். இந்த வார இறுதியில் கேரளாவின் பருவமழை தாக்கத்தை பொறுத்து கோவை மாநகரில் வெப்பம் குறையக்கூடும்.