கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய ஆம்புலன்ஸ் வாகனம், கோவையைச் சேர்ந்த டேனி ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இதனை நிர்வாக இயக்குநர் சிவராமன் கந்தசாமி வழங்கினார்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் / செயல் அலுவலர் விமலா, தக்கார் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.
மருதமலைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவசர மருத்துவ தேவைகளுக்காக உடனடி பயன்பாட்டில் இருக்கும் ஆம்புலன்ஸ் வசதி அவசியம் என்பதை உணர்ந்து, இந்த சேவை வழங்கப்பட்டதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
