இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஈகை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் ஆட்டிறைச்சிகளை தானமாக வழங்குவார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தார் போல் ஏழை எளிய மக்களுக்கு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.

WhatsApp Image 2026 05 28 at 9.56.05 AM 2

 

அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

2

 

இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும், அனைவரிடமும் ஈகை பண்பும் மனிதநேயமும் மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.