2011ல் கோவை மாநகரம் விரிவாக்கப்படுவதற்கு முன் இருந்த 60 வார்டு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் நோக்கில் இடைநில்லா குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கான குழாய்கள் பாதிக்கப்படுவதற்காக சாலைகள் தோண்டப்படுவது வழக்கம். தேர்தலுக்கு முன்னர் வரை தற்காலிகமாக சாலைகள் தோண்டுவது நிறுத்தப்பட்டது. இப்போது மாநகரின் பல இடங்களில் சாலைகள் இத்திட்டத்திற்காக தோண்டப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக கோவை மத்திய RTO சாலையில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதன்பின் அவை முறையாக மூடப்படாமல் உள்ளதால், அந்த சாலையில் ஒருப்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் தினமும் அந்த வழியாக செல்பவர்கள் சிரமமடைகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் இந்த குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

