கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய 222 மாணவர்களில், அலகு மீனாள் என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து, யேஷ்வந்த் 497 மதிப்பெண்கள் மாநில அளவில் 2ம் இடத்தையும், ரவிவர்மன் 496 மதிப்பெண்கள் 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும், விக்னேஸ்வரி (495), மேகா (494), பிரணவசுதன் (494), ஜோகேஷ் குகா (492), தன்யா (492), காயத்ரி (491), முகேஷ் ஜெயந்த் (491), நிரஞ்சனா (491) மற்றும் ஜனஸ்ருதி (490) ஆகிய மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாணவர்களின் இந்த சாதனையை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், பள்ளியின் தலைவர் மோகன்சந்தர், செயலாளர் உமா மோகன், மெட்ரிக் பள்ளி முதல்வர் பேபி, துணை முதல்வர் வனிதா மற்றும் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் டாக்டர் கீதா ஆகியோர் பாராட்டினர்.

இப்பள்ளியில் கணித பாடத்தில் 8 மாணவர்களும், அறிவியலில் 13 மாணவர்களும், சமூக அறிவியலில் 7 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் தலா 99 மதிப்பெண்களை அதிகபட்சமாகப் பெற்றுள்ளனர். மதிப்பெண் வாரியாக 490-க்கும் மேல் 11 மாணவர்களும், 450 முதல் 489 வரை 74 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.