கோவை இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் சார்பில், கணபதி சத்தி ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பிரீமியம் குடியிருப்புகளுக்கான அறிமுக விழா மற்றும் அனுபவ மைய துவக்க விழா நடந்தது.

அனுபவ மையத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லக்ஷ்மி நாராயணசுவாமி துவக்கி வைத்தார். இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் இயக்குனர்கள் கார்த்திகேயன், செந்தில் குமார், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்ஃபினியம் ஆல்டிடியூட் திட்டம் குறித்து இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில், இந்தத் திட்டத்தில் அனைத்து பிரிவினருக்குமான நவீன தொழில்நுட்பம் கொண்ட வீடுகள், சொகுசு வீடுகள் உள்ளன. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், உள்விளையாட்டு அரங்கம், தியேட்டர், பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஏக்கரில் 232 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன என்றார்.