தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மாணிக்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அவர் வெளியிட செய்திக்குறிப்பில், முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, “இன்று நீங்கள் நல்லாட்சி நாயகன். உங்களுக்கு சவால்கள் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். சட்ட ஒழுங்கு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. பொருளாதாரம், மக்கள் மற்றும் தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்,” என அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார் மாணிக்கம்.
“நல்லாட்சி இதுவரை கண்ணுக்கு தெரியாமல் இருந்தது. இன்று அது கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாக உணர்கிறோம்,” எனவும் அவர் கூறினார்.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் பொதுமக்களுக்கு வீட்டு மின்சார இணைப்பில் சலுகைகள் வழங்குவதை தாண்டி போதை பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரிவில் சிறப்பு கவனம் செலுத்தியது மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.
இன்று அவர் கோவில்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதும் மக்களின் வாழ்த்தை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
