ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் & முதன்மை கட்டமைப்பாளர் காளிராஜன் பஞ்சலிங்கம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இதன் மூலம் இக்கல்லூரி, ஐ ஜீனியஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டிகள் நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஹேக்கத்தானில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று அணிகளை ஊக்குவிக்கும் வகையில், சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பயணம், விசா மற்றும் பிற ஏற்பாடுகள் அனைத்தையும் ஐ ஜீனியஸ் நிறுவனம் மேற்கொள்ளும்.

திறமையாளர்களுக்கு, ஐ ஜீனியஸ் நிறுவனம் இலவச மைக்ரோசாஃப்ட் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும், நேரடி தொழில்துறை திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் வழங்கும். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் சுமதி  உடனிருந்தனர்.