அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் செல்வந்தரான எலான் மஸ்க் நடத்தக்கூடிய நிறுவனம் ஸ்டார்லிங்க்.

இந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான செயற்கைகோள்கள் மூலம் விண்வெளியில் இருந்து ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களைக் கொண்டு பூமியின் மூலை முடுக்கெல்லாம் அதிவேக இணைய வசதியை வழங்கி வருகிறது.

பூமியை விட்டு சற்று தொலைவில் இருந்து (சுமார் 160 கி.மீ. முதல் 2000 கி.மீ.வரை) ஒரு கொத்தாக செயற்கைகோள்களை நிலைநிறுத்தி அங்கிருந்து பூமியில் எங்கு வேண்டுமானாலும் இன்டர்நெட் வசதிகளை வழங்க செய்துவருகிறார் வேளாண் மஸ்க்.

இப்போதுவரை 10,000+ செயற்கைகோள்களை அவர் விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளார். இதன்மூலம் உலகின் எந்த மூலையிலும் உள்ள வீடுகள் நிறுவனங்கள் முதல்  விண்ணில் பறக்கும் விமானம், செல்போன் டவர்களே இல்லாத கடல்ப்பகுதி, காடு, பாலைவனம் என எங்கிருந்தாலும்  எளிதில் வழங்க முடியும். இதை இப்போதுவரை 100க்கும் அதிகமான நாடுகளில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கை நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில்  இந்தியாவை சேர்ந்தஉலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இது போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

இதற்காக பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் தயாராகி வருகிறது.

லோ-எர்த்-ஆர்பிட் சாட்டிலைட் எனப்படும் இந்த செயற்கைகோள்களை உருவாக்கவும், விண்ணில் செலுத்தவும் புது நிறுவனத்தை உருவாக்கலாமா அல்லது இந்த துறையில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றை வாங்கலாமே என ரிலையன்ஸ் திட்டமிட்டுவருகிறது என தகவல்வெளிவந்துள்ளது.

இப்படி ஒரு கட்டமைப்பு உருவாகும் போது, இந்தியாவினுடைய அதிவேக இண்டர்நெட் தேவைக்கான தொலைதொடர்பு மற்றும் வலைதள சேவைகள் பன்மடங்கு பலப்படும், மேலும் இந்தியாவின் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் எல்லாமே நம் நாட்டிற்குள்ளேயே பத்திரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மொபைல் இன்டர்நெட் சேவைகளில் புரட்சியே ஏற்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இனி வருங்காலத்தில் செயற்கைகோள் மூலமான அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்கவுள்ளது இணையதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இதுமட்டுமல்ல ஜியோ நிறுவனம் 6ஜி மொபைல் இன்டர்நெட் சேவைகளை அடுத்த சில ஆண்டுகளில் வழங்க அது தொடர்பான பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது.