ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆவாரம்பாளையம், காந்திபுரம் மற்றும் கிராஸ்கட் ரோடு பகுதிகளில் வாக்காளர் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். தேர்தல் அடையாளமாகக் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாக்கு வீரன் என்ற இருவாச்சிப் பறவை பொம்மைகளை உருவாக்கிப் பொதுமக்களுக்கு அளித்தனர்.


