திமுகவின் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கவிதா கல்யாணசுந்தரத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

சென்ற முறை, மேட்டுப்பாளையத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம், இம்முறை 50,000 வாக்கு வித்தியாசத்தில் கவிதா-வை வெற்றி பெற செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள், நெசவாளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் உங்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றி தருவார். இந்த தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும், வீடுகளுக்கு வந்து குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் பணியில் முழுதாக ஈடுபடுத்திக்கொள்வார் என உறுதியாக கூறினார்.
GRIUPONE

மேலும் கவிதா, பெண்கள், இளைஞர்கள் வாழ்வாதாரம் தொடர்பான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலினின் உதவியுடன் இந்த தொகுதிக்கு கொண்டுவருவார். இவர் வெற்றிபெற்றால் மேட்டுப்பாளையம் மிக பெரும் வளர்ச்சி அடையும். எனவே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கவிதாவை சட்டமன்றத்துக்கு அனுப்பவேண்டும், என அவர் கேட்டுக்கொண்டார்.
UDYAONE

இந்த தொகுதிக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும் ரூ.25 கோடி மதிப்பீட்டில் விளாமரத்தூர் குடிநீர் திட்டப்பணிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்து வர சந்தை வணீக வளாகம் கட்டிக்கொடுத்துளோம், ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் புதுப்பித்தல் என முதலமைச்சர் கடந்த 5 ஆண்டுகளில் நிறைய திட்டங்களை வழங்கி உள்ளார் என கூறினார்.
FLAMIONE

இந்த சட்டமன்ற தேர்தல் என்பது டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் நடைபெறும் போட்டி. இதில் வெல்லவேண்டும் என்றால், மேட்டுப்பாளையத்தில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் வெற்றிபெற்றது என்ற செய்தி வரவேண்டும் என அவர் அங்கு கூடிய மக்களை கேட்டுக்கொண்டார்.

“என் தொகுதி வெற்றியை விட சகோதரி கவிதாவின் வெற்றி எனக்கு முக்கியம்,” என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.