கே.எம்.சி.ஹெச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்வில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டின் உலகளாவிய சுகாதார முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, தரமான மருத்துவ சேவை என்பது மருத்துவமனை வளாகத்தோடு, நின்றுவிடாமல் அதற்கு அப்பாலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை உலக சுகாதார தினம் நினைவூட்டுகிறது என்றார்.

கே.எம்.சி.ஹெச் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். உறுதிமொழிச் சுவரில் கையெழுத்திட்ட அவர், பொது சுகாதாரத்தைப் பேணுவதில் தனிநபரின் பொறுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கான தூதுவர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பொது மருத்துவ நிபுணர் டாக்டர் மனோஜ், அதிகரித்து வரும் வாழ்க்கை முறை நோய்கள் மற்றும் அவற்றைக் கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
