தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, அதிமுக கோவை மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான அம்மன் கே.அர்ஜுனன், அதிமுக வடவள்ளி சந்திரசேகர், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

