கோவை துடியலூர் விஸ்வநாதபுரத்தில், ஸ்ரீ கணபதி மார்ட் அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை, ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட், ஸ்ரீ கணபதி மார்ட், கண்ணன் ஜீப்லி காபி, எம்.ஆர்.என் வாட்டர் சப்ளை மற்றும் ஜி.வி வாட்டர் வாஸ் உள்ளிட்டோர் இணைந்து 2 வது ஆண்டாக கோடை வெயிலில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்து, பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதனை மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை தலைவர் சிரவை ஆதினம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர். அதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாங்கி பருகிச் சென்றனர். தினமும் சுமார் 1000 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை செயளாலளர் சண்முகம், பொருளாளர் சுந்தரம், கணபதி மார்ட் நிர்வாக இயக்குநர் கணபதி, பொது மேலாளர் அகிலன், ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் இளங்கோவன், அறங்காவலர் குழு கவிச்சந்திர மோகன், நிர்வாகிகள் காளிச்சாமி, எம்.ஆர்.என் வாட்டர் சப்ளை நாகராஜ், ஜி வி வாட்டர் வாஸ் உரிமையாளர் ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
