இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெயா, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் மூலம் வாக்குப்பதிவின் அவசியம், அதன் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயகத்தில் குடிமக்களின் பங்கு குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. மனித சங்கிலி, உறுதிமொழி எடுப்பு போன்றவை மூலம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
