ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதியுதவியுடன் கூடிய ஆய்வகத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுகளை ஊக்குவிக்கவும், ஆய்வுக்குத் தேவையான சிறந்த வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் உதவும் நோக்கிலான இந்திய அரசின் டிஎஸ்டி ஃப்ஐஎஸ்டி நிதியுதவித் திட்டத்தின் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு லெவல் ஏ பிரிவில் ரூ.76 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஆய்வுத்துறையில் கல்லூரியின் முயற்சிகள், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் வகையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் ரூ.26 லட்சம் வழங்கப்பட்டது. இதன் மூலம் நவீனப் பகுப்பாய்வு வசதிகளுடன் அதிநவீன ஆய்வுக் கருவிகளைக் கொண்ட ஏஐ மற்றும் எம்.எல் ஆய்வகமும் ஹெச்.பி.எல்.சி, ஃப்டிஐஆர் ஆய்வகமும் உருவாக்கப்பட்டு ஆய்வுப் பயன்பாட்டிற்காக அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் சித்ரா இதுபற்றிக் குறிப்பிடும்போது, புதிய கண்டுபிடிப்புகள், பலதுறை சார்ந்த கூட்டு ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உதவுமாறு பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் உதவக்கூடிய வகையில் நவீனக் கருவிகளோடு இந்த ஆய்வகத்தை வடிவமைத்துள்ளோம். இதனால் கல்வியும் ஆய்வுத்துறையும் சிறந்து விளங்கும் என்றார்.
