திருப்பூரில் உள்ள வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் முதியோர் காப்பக புதிய கட்டிட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த பிரத்யேக அறையை நடிகர் சிவகுமார் மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் இணைந்து திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், முதியோர்களை பராமரித்து பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். பெரியோர்களுக்கு செய்யும் சேவையின் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதமும், பண்பாடும் அடுத்த தலைமுறைக்கும் சென்றடையும் என்றும், வயது முதிர்ந்த பெற்றோர்களை கவனித்துக்கொள்வது பிள்ளைகளின் அடிப்படை கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

