கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்துறை ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.
746 அணிகளைச் சேர்ந்த 2036 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவும் சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகளை முன்வைத்து காட்சிப்படுத்தினர்.
கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி, பைந்தமிழ்பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் இந்து முருகேசன் வாழ்த்துரை வழங்கினார்.
டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் குளோபல் அதிகாரி, விக்டோயர் டி மார்கெரி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு, உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
தலைமை விருந்தினராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி சுசீந்திரன் கலந்து கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
டான்காம் தலைமை நிர்வாக அதிகாரி விஜயதீபன், துணைத் தலைவர் (தொழில்நுட்பம்) ராஜா சுப்பிரமணியன், வாலியோ நிறுவனத்தின் மின்-மொபிலிட்டி நிபுணர் விஜயகுமார் வேலுசாமி, சிடிஐஐசி தலைமை நிர்வாக அதிகாரி வினோத் குமார், இயக்குநர்கள் சுந்தரம் மற்றும் பொன்ராம் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
