கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் மருத்துவமனையின், குழந்தைகளுக்கான பிரத்யேக வெளி நோயாளிகள் பிரிவு, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கர் டிம்பர் பில்டிங் முதல் தளத்தில் அமைந்துள்ளது.

இங்கு குழந்தைகளுக்கான பிரத்தியேக பல் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை கோவையின் அனுபவம் வாய்ந்த மூத்த பல் மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன், நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜன், தலைமை நிர்வாக இயக்குனர் ஜெயராம், தலைமை இயக்க அலுவலர் டாக்டர் ரம்யா ஜெயராம், மருத்துவமனையின் மைய தலைவர் சபரிநாதன், குழந்தைகளுக்கான பல் மருத்துவர்கள் டாக்டர் பத்மநாபன், டாக்டர் அபர்ணா கலந்துகொண்டனர். மேலும், திறப்பு விழாவில் பல முக்கிய மருத்துவப் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

WOmen centre 2

இந்த மையத்தில், குழந்தைகளுக்குப் பயமில்லாத வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சிகிச்சை முறைகள் வழங்கப்பட இருப்பதாக புதிய பல் சிகிச்சை பிரிவின் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு: 6384400034, 0422-4040202.