சுரானா அண்டு சுரானா சர்வதேச வழக்குரைஞர்கள் நிறுவனம் தனது புதிய கிளையை, கோவையில் தொடங்கியுள்ளது.
சென்னையில் 1971-இல் நிறுவப்பட்ட வழக்குரைஞர்கள் அமைப்பு, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தென்னிந்தியாவின் உயர்ந்த தரவரிசை பெற்ற சட்ட நிறுவனமாகும்.
கார்ப்பரேட், வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகிய துறைகளில் வல்லமை பெற்றுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட நகரங்களிலும், உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.
நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் சுரானா, 2017-இல் தமிழ்நாட்டில் நாட்டின் முதல் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் உருவாக்குவதற்கு மத்திய அரசுடன் கருத்தாக்கம் செய்து தொடர்ந்து ஆதரித்து இவ்வழித்தடம் அமைவதற்கு பங்காற்றினார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள பல தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் குடும்பங்களுக்கும் சென்னை அலுவலகத்திலிருந்து சட்ட சேவைகளை வழங்கி வந்த இந்த அமைப்பு, தற்போது கோவையில் கிளையைத் தொடங்கியுள்ளது.
கோவை கொடிசியா அமைப்புடன் சர்வதேச வழக்குரைஞர்கள் அமைப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கொடிசியா உறுப்பினர்களுக்கு சட்ட, நிதி, வரி மறுசீரமைப்பு மற்றும் இணக்கம் தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது.
நிகழ்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தொழில் குடும்பங்களின் மாற்றம் மற்றும் சவால்களை மையமாகக் கொண்ட இரண்டு கலந்துரையாடல் அமர்வுகளும் நடைபெற்றன.
