கோவையில் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் பிப்.,24 வரை நடைபெறுகிறது.

ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெறும் இம்மஹோத்சவம், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் ஜன்ம தினோத்சவத்தை நினைவுகூரும் வகையில் நடத்தப்படுகிறது.

ஸ்ரீ ராகவேந்திரா சப்தாஹ காரியசரண சமிதி, ராகவேந்திர சப்தாஹ சேவா சங்கம், கோவை ஆகியவை இணைந்து விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

Ragavenda 2 scaled

குருராஜ சன்னிதானத்தில் தினமும் காலை 7.30 மணிக்கு க்ஷீராபிஷேகத்துடன் அஷ்டோத்தர பாராயணம், 8 மணிக்கு பஞ்சாம்ருத அபிஷேகம், லட்ச புஷ்பார்ச்சனையுடன் பாதபூஜை, கனகாபிஷேகம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு மகாமங்களாராதி, மாலை 7 மணிக்கு தீபோத்ஸவம் மற்றும் மஹாதீபோத்சவம், இரவு 10.30 மணிக்கு ஸ்வஸ்தீபத்ஸவம் நடைபெறும்.

சப்தாஹத்தின் போது தினமும் காலை 6 – 7.30 மணி வரை அனந்தபுரத்தைச் சேர்ந்த வித்வான் அப்பண்ணாச்சாரியார், சதானந்த சாஸ்திரி ஆகியோரால் சுப்ரபாதம், பிரதா ஸ்மரணை, வேத பாராயணங்கள் நடைபெறும். காலை 7.30 – 9 மணி வரை தாரதம்ய பஜனை, பாராயணம், 9 – 9.30 மணி வரை உடுப்பி பலிமாரு மடத்துடன் தொடர்புடைய அறிஞர்களின் பிரவசனங்கள் நடைபெறும்.

மஹோத்சவத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மஹா மஹாபாத்யாய பண்டித கேசரி வித்வான் ராஜா கிரி ஆச்சார்யா, தெலுங்கானா, பெத்தசிந்தரேவுலா, வித்வான் ஆத்ய கேசவாச்சாரியா, மந்திராலயம், ஶ்ரீ குரு சர்வ பௌம தாச சாகித்திய திட்டம், இயக்குனர் வித்வான் ஸ்ரீ அப்பண்ணாச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ragavenda 3 scaled

கௌரவ விருந்தினர்களாக ஜோதிட வித்வான் ராஜகோபாலன், முதுநிலை வழக்கறிஞர்கள் ராகவேந்திரன், நாகசுப்பிரமணியம், கோயம்புத்தூர் பாரதிய வித்யா பவன் முன்னாள் கவுரவ பதிவாளர் பிரபாகர் ராவ், அட்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் ரவிசங்கர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், பிரிக்கால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வனிதா மோகன் மற்றும் முதுநிலை வழக்கறிஞர்  சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்