ரயில்வே தேர்வு வாரியம் குரூப் டி பதவிகளுக்கான தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ரயில்வே தேர்வு வாரியத்தால் உதவியாளர் (தட இயந்திரம்), உதவியாளர் (Bridge), பாதை பராமரிப்பாளர் (குழு IV), உதவியாளர் (P-way), உதவியாளர் (TRD), உதவி லோகோ ஷெட் (மின்சாரம்), உதவியாளர் செயல்பாடுகள் (Electrical), உதவியாளர் (TL & AC), உதவியாளர் (C & W), பாயிண்ட்ஸ்மேன் B, மற்றும் உதவியாளர் (S & T) ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 22195 காலிப்பணியிடங்களுக்கு 02.03.2025 வரை விண்ணப்பிக்கலாம் . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகப்படியாக 33 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ படித்தவர்கள் இத்தேர்வுக்கு http://www.rrbcdg.gov.in/ or https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இப்போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 18.02.2026 முதல் தொடங்கியுள்ளது.
பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சிறு தேர்வுகள், மாதிரித்தேர்வுகள் ஆகியவை நடத்தப்படவுள்ளது. இந்த அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு பயிற்சிபெரும் மாணவர்களுக்காக 5000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இணைய வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
