கோவை – ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வியாழக்கிழமைகளில் காலை 2.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06181), பிப்ரவரி 26, மார்ச் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் புறப்பட்ட நாளில் இருந்து 3வது நாள் மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஜெய்ப்பூரில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ((எண் 06182) மார்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் புறப்பட்ட நாளில் இருந்து 4வது நாள் காலை 8.30 மணிக்கு கோவையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
