இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 27வது விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கோவை பீளமேடு இ 2 காவல் நிலைய காவல் துறை ஆய்வாளர் அர்ஜுன் குமார் கலந்து கொண்டு பேசுகையில்: இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் சிறப்பான தனித்திறமைகளை கொண்டுள்ளனர். சரியான நேரத்தில் கடின உழைப்போடு செயல்பட்டால் இலக்கை அடையலாம்.

HICAS 4 scaled

இந்த மாணவ பருவம் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். கற்க வேண்டிய அனைத்தையும் இப்போதே கற்றுக் கொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்வி இருப்பதை போல வாழ்விலும் பல ஏற்ற இறக்கம் வரும். எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா, அறங்காவலர் யமுனா சக்திவேல், பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் சாலமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

HICAS 2 2 scaled

கம்பம் ஏறுதல், கயிற்றின் மீது நடத்தல், வளையங்களை வைத்து நடனம் ஆடுதல், தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மற்றும் தடகள போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.