இந்திய மருத்துவ சேவை வழங்குநர்கள் சங்கத்தின் குளோபல் கான்க்லேவ் மாநாட்டில், கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ‘சிறந்த ஆராய்ச்சி மற்றும் புதுமை’ விருதைப் பெற்றுள்ளது.

மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலில் நடைபெற்றது விழாவில், கே.எம்.சி.ஹெச் குழுமம் மூன்று விருதுகளை பெற்றது. சிறந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகக்கான விருதை கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வென்றது. சிறந்த மருத்துவச் செயல்பாடுகள் மற்றும் சிறந்த அவசரக்கால சிகிச்சை, இந்த இரு விருதுகளையும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வென்றது.

இந்திய மருத்துவ சேவை வழங்குநர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கிர்தர் கியானி, விருதை வழங்க, கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி கல்வி திட்டத்திற்கான டீன் டாக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

இந்தச் சாதனை குறித்து கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், இந்த அங்கீகாரம் எங்களது மருத்துவ முன்னேற்றத்திற்கு கிடைத்த சான்று. இது நிறுவனத்திற்கான விருது மட்டுமல்ல, நோயாளிகளுக்கு சிறந்த தீர்வுகளைக் காண உழைக்கும் எங்களது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எனத் தெரிவித்தார்.

கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், நவன மருத்துவத்திற்கு ஆராய்ச்சியே முதுகெலும்பு என்றும், இச்சாதனை தங்களை இன்னும் சிறப்பாகச் செயல்படத் தூண்டுவதாகவும் குறிப்பிட்டார்.