ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி, “இசட் தலைமுறை (Gen Z) மனநல சவால்கள்: செவிலியர் உத்திகள்” என்ற தலைப்பில், சென்னை தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து மாநில அளவிலான மாநாட்டை நடத்தியது.

கல்லூரி முதல்வர் கிரிஜாகுமாரி வரவேற்புரை வழங்கினார். மாநாட்டின் கருப்பொருளை மனநல செவிலியர் துறையின் இணைப் பேராசிரியர் அனுசுயாதேவி வெளியிட்டார்.

மனநல செவிலியர் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், இசட் தலைமுறை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சான்றுகள் சார்ந்த செவிலியர் உத்திகள் குறித்து விவாதித்தனர். மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு செவிலியர் நிறுவனங்கள், மருத்துவமனைகளைச் சேர்ந்த 681 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.