பி.எஸ்.ஜி மருத்துவமனையின் 36ம் ஆண்டு மருத்துவமனை தின விழா, ஐ.எம்.எஸ்.ஆர் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் இயக்குநர் புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன் தலைமையுரை வழங்கினார்.

3 18

சிறப்பு விருந்தினர்களாக இ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணர் மூத்த ஆலோசகர் டாக்டர் ராமமூர்த்தி, மூத்த ஆலோசகர் டாக்டர் தங்கவேலு கலந்துகொண்டனர்.

2 18

நிகழ்வில், 36 பணியாளர்களுக்கு இந்த ஆண்டின் நட்சத்திர ஊழியர் விருதுகளை, அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார். மருத்துவ இயக்குநர் டாக்டர் கார்த்திகேயன், மருத்துவ புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் பரத்வாஜ், மருத்துவர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

4 11