துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளையின் சார்பில், சேவைச் செம்மல் குமாரசாமி கவுண்டர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுதொடர்பாக சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:  2010ம் ஆண்டு குமாரசாமி கவுண்டர், துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளையை தொடங்கினார்.

10 1

2012ம் ஆண்டு அவரது மறைவுக்கு பிறகு 13 ஆண்டுகள்  தொடர்ந்து 6000க்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் ரூ.6 கோடிக்கு நிதியுதவி வழங்கப்படுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 12ம் முடித்த மாணவர்களுக்கு கல்லூரி உதவித் தொகை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

4 6

குமாரச்சாமிக் கவுண்டரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் நூற்றாண்டுவிழா நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, ஐம்பொன் சிலை நிறுவப்பட்டுள்ளது எனக் கூறினார்.

நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் 130 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு, புத்தாடையும், இனிப்பும் வழங்கப்பட்டது.

5 4

அறக்கட்டளையின் தலைவர் சிரவை ஆதினம் நான்காம் குருமகா சந்நிதானம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள்,  உபதலைவர் சங்கர் வாணவராயர், செயலாளர் சண்முகம், பொருளாளர்  சுந்தரம், அறங்காவலர்கள் மனோமன்றாடியார், டாக்டர்.சேதுபதி, மோகன்குமார், ஜெயகுமாரி அழகப்பன், டாக்டர்.சந்திரலேகா கந்தசாமி, வலிதா மகாலிங்கம் மற்றும் ஶ்ரீ கணபதி மார்ட் நிர்வாக இயக்குநர் கணபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.