தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி ‘National Lok Adalat’ எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை 13.9.2025 நாடு முழுவதும் நடைபெற்றது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத் துவக்க நிகழ்வு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா பங்கேற்றுத் துவக்கி வைத்தார். மேலும், மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகை – காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, சக நீதிபதிகள், கோவை மாவட்ட வழக்கறிஞர், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.