ஸ்ரீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் சயின்சஸ் நிறுவனத்தின் செவிலியர் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்பட்டது. இதில் ஊட்டச்சத்து வாரம் குறித்த கண்காட்சி இடம்பெற்றது.
இதை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், சி.ஏ.ஓ மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் மற்றும் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கிரிஜாகுமாரி தொடங்கி வைத்தனர். செவிலியர் அடிப்படைத் துறையின் தலைவர் சசிகலா கருப்பொருளை வெளியிட்டார். நிகழ்வில் குழந்தைகள் மருத்துவர் ஷோபி ஆனந்தி சிறப்பு சொற்பொழிவு வழங்கினார்.
