கிணத்துகிடவு ஆதி மாருதி நெக்ஸா ஷோரூம், இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து “விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மலுமிச்சம்பட்டி சாலை சந்திப்பில் நடத்தியது.
நிகழ்விற்கு ஆதி மாருதி நெக்ஸா ஷோரூம் சேல்ஸ் மேனேஜர் வசந்த ராஜ், சர்வீஸ் மேனேஜர் தேவா, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயா, ஆட்டோமொபைல் துறைத் தலைவர் சபரிநாதன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரவிக்குமார், செட்டிபாளையம் துணை ஆய்வாளர்கள் சசிகுமார் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பொதுமக்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்து நாடகங்கள் மற்றும் பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பம்சமாக, ஆதி மாருதி வாகன ஓட்டுநர்களுக்கு இலவச வாகன சரிபார்ப்பு முகாம் நடத்தப்பட்டது.