ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக விழிப்புர்ணர்வு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன், தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், காவல் துறை துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போதை பொருட்கள் மற்றும் அதன் பயன்பாட்டினால் வரும் கேடுகள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, மற்றும் பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான செயல்களை பதிவு செய்ய பயன்பாட்டில் இருக்கும் தமிழக அரசின் இனைய செயலி அறிமுகம் செய்யப்பட்டது.