கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில், 2024-2025 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (27.7.2025) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய வித்யா பவனின் கௌரவத் தலைவர் மற்றும் கல்வியாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், துணைத்தலைவர்கள் நந்தகுமார், சண்முகசுந்தரம், செயலாளர் சுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் லோகநாதன், பாண்டியன், குமார், கௌரவத் தலைவர்கள் டாக்டர்.என்.ஜி.பி கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், டாலர் குரூப் ஆஃப் கம்பெனீஸ் சார்பில் டாக்டர் மதுமிதா ராமமூர்த்தி மற்றும் சங்கத்தின் நிர்வாக குழுவினர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.