கோவை மக்களின் 30 ஆண்டுகால கனவை நினைவாக்கிடும் வகையில், இரண்டாவது முழுமை திட்டத்தை வெளியிட்டதற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, எம்.ஜி.ஆர் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் தேசிய செயலாளர் லயன் செந்தில்குமார், துணைச் செயலாளர் கண்ணன், இணை செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.