இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் என்.சி.சி அலுவலர் ஜெய்னுலாபிதீன், ஒரு மாத விமானப்படை சிறப்பு பயிற்சி பெற்றார்.
இந்த பயிற்சி வகுப்பானது சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள இந்திய விமானப்படை நிலையம், கிரௌண்ட் பயிற்சியாளர்கள் பள்ளியில் அமைந்துள்ள என்.சி.சி அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் நடைபெற்றது. பயிற்சியில் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 8 பேர் பங்குபெற்றனர்.
ஆண்டுதோறும் இம்மையத்தில் என்.சி.சி அலுவலர்களுக்கான ஆரம்ப நிலை பதவி பயிற்சியும், பதவி உயர்வு புத்தாக்க பயிற்சியும் நடைபெறுவது வழக்கம். பயிற்சிகள் அனைத்தும் என்.சி.சி இயக்குனர் டெல்லி, இந்திய பாதுகாப்புத்துறையின் உத்தரவுப்படி நடத்தப்படும். இதில் பொதுப்பாடம், விமானப்படை சிறப்பு பாடம், ஏரோ மாடல் செய்முறை, எழுத்துத்தேர்வு தேர்வு, நடை அணிவகுப்பு செய்முறை மற்றும் எழுத்துத்தேர்வு ஆகிய தேர்வுகள் நடைபெறும்.

இதில் இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த அறிவியல் மற்றும் மனிதவியல் துறை பேராசிரியர் மற்றும் என்.சி.சி அலுவலர் பிளையிங் ஆபிஸ்ர் ஜெய்னுலாபிதீன் அனைத்து பயிற்சிகளிலும் சிறப்பாக பங்குபெற்று முதல் தர மதிப்பெண் மற்றும் சான்றிதழ் பெற்றார்.
பயிற்சியில் பங்கேற்று திரும்பிய என்.சி.சி அலுவலரை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா சதிஷ் பிரபு மற்றும் கல்லூரியின் முதல்வர் ஜெயா ஆகியோர் வாழ்த்தினர்.

