என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களான டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் மூலம் இலவச தொழில் பயிற்சி சோமந்துறை சித்தூரில் வழங்கப்பட்டது.
விரிவாக்க சேவைத்துறை சக்தி புரா வின் மூலம் பயிற்சியை முடித்த கிராமப்புற இளைஞர்கள், மகளிர்க்கு அடிப்படை கணிப்பொறி பயிற்சி, கட்டிங் & டைலரிங் பயிற்சியை முடித்த 72 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் இணைச்செயலாளர் சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசுகையில்: பயிற்சி பெற்ற அனைவரும் சுயதொழில் செய்து அல்லது ஒரு தொழில் துவங்கி தன் குடும்ப வளர்ச்சிக்கு வேண்டிய அளவு பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் எனப் பேசினார்.
இதில் என்.ஐ ஏ கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன், பயிற்சி ஆசிரியர்கள் சித்ரா, ராஜேஸ்வரி, ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.