கோவை, பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர் – (2013-2017), தொழில்முனைவோர் மற்றும் விஜிசித்து வ்லாக்ஸின் உறுப்பினருமான சூர்யா விஜிசங்கர் சிறப்பு விருந்தினராகவும், கல்லூரியின் முன்னாள் மாணவி – (2002-2006), இந்தியா, ஆக்செலரன்ட் திட்ட மேலாளர் சிவகாமி கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். மேலும், இருவரும் கல்லுரியின் சேவை மற்றும் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டியதுடன், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்கள்.
நிகழ்ச்சியில், 2021-2025 ஆண்டிற்கான சிறந்த மாணவர் விருதும் மற்றும் விளையாட்டுப் பிரிவில் சிறந்த மாணவர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் துறை வாரியாக சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச்சான்றுகளும் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்களின் டாரக் -25 கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் அலமேலு, கல்லூரி முதல்வர் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
