தமிழ்நாடு விமானப்படை என்சிசி (2 TN Air Sqn NCC) சார்பில் சமூக சேவை மற்றும் சமுதாய மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக காடு உருவாக்கத்தை ஊக்குவிப்பதை மையமாக கொண்டு லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்க்கு முயற்சியாக 75 ஆயிரம் விதைப்பந்துகளை 260 மாணவர்கள் 2 மணி நேரத்தில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (18.04.2025) உருவாக்கினர்.
இந்த நிகழ்வு தேசிய மாணவர் படையின் கோவை குரூப் கமாண்டர் கர்னல் ராமநாதன் மேற்பார்வையில், 2 தமிழ்நாடு விமானப்படை என்சிசி கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் தலைமையில் நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், நெகமம் நீர்வளத்துறை பாசனப்பிரிவு- 3 உதவி பொறியாளர் ராஜன், பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை தேன்மொழி ஆகியோர் இந்த சாதனை நிகழ்வை பார்வையிட்டனர்.

கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, கல்லூரியின் என்சிசி அதிகாரி லாவண்யா, பிற கல்லூரி என்சிசி அதிகாரிகள் மற்றும் 2 தமிழ்நாடு விமானப்படை என்சிசி அதிகாரிகள் சதீஷ், ரவி ஆகியோர் இந்த சாதனை நிகழ்வு நடைபெற உறுதுணையாக இருந்தனர்.