கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் செரா ஆரோன், ஒரே மாதத்தில் மூன்று உலகச் சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். இளம் வயதிலேயே தனது அபார நினைவாற்றல் மற்றும் திறமையால் சாதனை படைத்த சிறுவனை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நேரில் சந்தித்துப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

4a 5 scaled

ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான திருக்குறள்களை ஒப்பித்து சிறுவன் செரா ஆரோன் சாதனை படைத்துள்ளார். ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரை தொடங்கும் மோட்டார் சைக்கிள்களின் பெயர்களை வெறும் 6.82 வினாடிகளில் ஒப்பித்துத் தனது நினைவாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரை தொடங்கும் கார் பெயர்களை 26 வினாடிகளில் ஒப்பித்துச் சாதனை படைத்துள்ளார்.