குடியரசுதினம், இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுபானக்கடைகள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில்  செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல்  சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்தும் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26, இராமலிங்கனார் நினைவுதினம் பிப்ரவரி 1 ஆகிய நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைப்பவா்கள்,  மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் செல்பவா்கள் மீது  தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் மூலமாக  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.