நிர்மலா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் அப்துல் கலாம் பிறந்தநாள் அன்று இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மேரி பபியோலா தலைமைத் தாங்கினார். கல்லூரி தொடங்கி புலியகுளம் வரை பேரணி நடந்தது.நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிரேசி, மோகனா, தன்யா மற்றும் முதலாமாண்டு மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.
