கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் உழைப்பாளர் தின விழா கொண்டாட்டம்  நடைபெற்றது. நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

செளரிபாளையம், உடையாம்பாளையம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது உழைப்பின் மூலம் பல்வேறு சமுதாய பணிகளை செய்து வரும் மாநகராட்சி கழிப்பிட பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோருக்கு  உழைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டது. விருதாளர்கள் அனைவருக்கும் இனிப்பு, கார வகைகள் அடங்கிய உழைப்பாளர் தின பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.