மகளிர் தினத்தை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸில் 30 % சிறப்புத் தள்ளுபடி சனி, ஞாயிறு (மார்ச் 7,.8) ஆகிய இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத்தள்ளுபடி விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புத் தள்ளுபடி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படுகிறது.

மேற்படி சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், ஆரணி பட்டுப் புடவைகள், கோரா காட்டன் சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், ஆயிரம் புட்டா சேலைகள், புதினம் காட்டன் சேலைகள், செடி புட்டா சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், சேலம் பட்டுப் புடவைகள், ஜெயங்கொண்டம் காட்டன் சேலைகள், சேலம் பிளாக் பிரிண்ட் காட்டன் புடவைகள், முகூர்த்த பட்டுப் புடவைகள், ஏராளமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மெகா கிளியரன்ஸ் விற்பனையில் 40% முதல் 90% வரை தள்ளுபடி கோ-ஆப்டெக்ஸ் வ.உ. சி. பார்க், மருதம் விற்பனை நிலையம், மற்றும் சாய்பாபாகாலனியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் விற்பனை நிலையம் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வ.உ.சி பார்க் கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையம் மற்றும் சாய்பாபாகாலனி ஸ்ரீபாலமுருகன் விற்பனை நிலையங்களில் பழசுக்கு புதுசு சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் பழைய பட்டுப் புடவைகளை மாற்றிக் கொண்டு அதற்கான மதிப்பில் தேவைப்படும் வேறு எந்த ரகங்களையும் பெற்றுக்கொள்ளலாம் என முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்துள்ளார்.