கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில், ரூ.208.50 கோடியில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 25ம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர  தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைககப்பட்டுள்ளது.

செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள், செடிகள் நடப்பட்டு உள்ளன.  2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  தரை தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

semoli 2

திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட விளையாட்டுத்திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை‌, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பணிகள் முழுமையாக நிறைவடையாததால் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள வேலைகளை முடிக்கும் பணி நடந்து வருகிறது. டிசம்பர் 5ம் தேதி பூங்கா திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.